மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார்

🕔 January 18, 2018

– மப்றூக் –

முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை இன்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம், தனது ராஜிநாமா கடிதத்தினை இன்றைய தினம் சல்மான் கையளித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க,  முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு தேசியப்பட்டியல் நாடடாளுமன்ற பதவிகளை ஐ.தே.க. வழங்கியது.

இதில், ஒரு தேசியப்பட்டியலை மு.கா. தலைவர் ஹக்கீம் தனது சகோதரர் டொக்டர் ஏ.ஆர் ஹபீசுக்கும், மற்றைய தேசியப்பட்டியல் பதவியினை தனது நண்பர் சல்மானுக்கும் வழங்கினார்.

குறித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு, மேற்படி இருவரையும் தற்காலிகமாகவே நியமிப்பதாக அப்போது ஹக்கீம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், சில மாதங்களின் பின்னர் தனது சகோதரர் வசமிருந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மீளப் பெற்று, அதனை திருகோணமலையில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எஸ். தௌபீக்குக்கு ஹக்கீம் வழங்கினார்.

எவ்வாறாயினும் தற்காலிகமாக சல்மானுக்கு ஹக்கீம் வழங்கிய ‘தற்காலிக’ தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, சுமார் இரண்டரை வருடங்கள் அனுபவித்து விட்டு, சல்மான் ராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்