நாடாளுமன்ற உறுப்பினருக்கான இலவச தபால் செலவு, வருடமொன்று மூன்றரை லட்சம் ரூபாவாக அதிகரிப்பு

🕔 January 18, 2018

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த இலவச தபால் செலவினை 03 லட்சத்து 50 ஆம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்த இலவச தபால் செலவாக 01 லட்சத்து 75 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.

மேற்படி தொகை 100 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மாகாணசபை உறுப்பினர்களுக்கான தபால் செலவு கொடுப்பனவினை 24 ஆயிரம் ரூபாவிலிருந்து 48 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இது குறித்து அமைச்சரவை இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக கூறுகையில்; மேற்படி தபாற் செலவு கொடுப்பனவுகள் 10 வருடங்களின் பின்னர் திருத்தியமைக்கப்பட்டுள்ளன என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்