உள்ளுராட்சி தேர்தலில், தகுதியற்ற 80 வேட்பாளர்கள்; விஜித ஹேரத் தெரிவிப்பு

🕔 January 11, 2018

ள்ளுராட்சித் தேர்தலில் தகுதியற்ற 80 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று, ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த விடயம் தெரிய வந்ததாகவும் அவர் கூறினார்.

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 80 வேட்பாளர்களை, தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, குறிப்பிட்ட வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றியீட்டினாலும், அவர்கள் உறுப்பினர்களாக தெரிவாவதில் கேள்விகள் எழுந்துள்ளன எனவும் விஜித ஹேரத் கூறினார்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்