அக்கரைப்பற்றில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் பதட்டம்; கரையோரப் பிரதேசங்களெங்கும் மக்கள் அச்சம்

🕔 December 22, 2017

– மப்றூக் –

க்கரைப்பற்று பிரதேசத்தில் நிலப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தமையினால், அப் பிரதேசமெங்கும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது (இரவு 11.00 மணி) கடல் நீர் சுமார் 15 மீற்றர் வரை, நிலப் பகுதிக்குள் புகுந்துள்தாக அறியக் கிடைக்கிறது.

இதேவேளை, நிலப் பகுதியை நோக்கி கடல் நீர் புகுந்துள்ளமையினைக் காண்பதற்காக, கடற்கரையினை நோக்கியும் மக்கள் சென்றுள்ளனர்.

இந்தச் செய்தி, அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள் முழுவதும் பரவியமையினால், ஏனைய பகுதிகளில் கடற்கரையினை அண்டி வாழும் மக்களும் அச்சத்தில் உள்ளதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்த மேலதிக தகவல்களை விரைவில் வழங்கவுள்ளோம்.

வீடியோ

Comments