அவதூறாக எழுதும் பேஸ்புக் கணக்குக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் முறைப்பாடு

🕔 December 11, 2017

– முன்ஸிப் அஹமட் 

அவதூறு ஏறு்படுத்தும் நோக்கத்துடன், போலியான பெயரில் இயங்கி வரும் பேஸ்புக் கணக்கு ஒன்று தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர், கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

பொய்யாகவும், கீழ்தரமாகவும், கலாநிதி ரமீஸ் அபூபக்கரின் கௌரவத்துக்கு இழுக்கினை ஏற்படுத்தும் வகையிலும், குறித்த பேஸ்புக் பக்கத்தில் பல்வேறு பதிவுகள் இடப்பட்டு வந்துள்ளன.

இந்த நிலையில், “இவ்விடயத்தினை நண்பர்கள் என்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்தமையினை அடுத்து, இந்த முறைப்பாட்டினை நான் மேற்கொண்டேன்” என்று, கலாநிதி ரமீஸ் அபூபக்கர் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பேஸ்புக் கணக்கு தொடர்பில், கல்முனை பொலிஸ் நிலையத்தின் இணைய குற்றப் பிரிவில், கலாநிதி ரமீஸ் முறைப்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்