– அஸ்ரப் ஏ. சமத் –இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக, ரவி ஜயவர்தன நியமிக்கப்பட உள்ளார். ரவி ஜயவர்தன நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான இவர், நடப்பு விவகார நிகழ்ச்சிப் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
ரூபவாஹினியின் தலைவராக, இதுவரை காலமும் தலைவராக கடமையாற்றி வந்த சோமரட்ன திஸாநாயக்க, அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ள ரவி ஜயவர்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டத்தையும், லாங்செயார் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பற்றிய பட்டத்தையும் பெற்றுள்ளார்.
ரவி ஜயவர்தன, சில காலம் சிறைச்சாலை ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


