கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு

🕔 August 1, 2015

Muzammil - 01– அஸ்ரப் ஏ. சமத் –

ம்பாறை மாவட்ட முஸ்லிம்களைப்போன்று, கொழும்பு மாவட்ட முஸ்லிம்களும் ஒன்றுபட்டால்,  03 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் வென்றெடுக்க முடியுமென்று கொழும்பு மாநகரசபை மேயா் மேயா் ஏ.ஜெ.எம். முசம்மில் தெரிவித்தார்.

ஐ.தே.கட்சி சார்பாக, கொடும்பு மாவட்டத்தில் போட்டியிடும் பெரோசா முசம்மிலை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திலே மேயர் முசம்மில் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

ஒரு லட்சத்து 50 ஆயிரம் முஸ்லிம்கள் வாக்காளா்கள் கொழும்பில் உள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தோ்தலில்,  ஜ.தே.கட்சியில்  நானும், மா்ஹூம் மஹ்ரூப்பும், சபீக் ராஜப்டீனும் ஐ.தே.கட்சியில் போட்டியிட்டோம். ஆனால்,  நீங்கள் ஒன்று படாமல், கொழும்புக்கு வெளியில் உள்ளவா்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்கினீர்கள்.  கடந்த 06 வருட காலமாக கொழும்பில் முஸ்லிம் நாடாளுமன்றம் பிரநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது. நாம் விருப்பு வாக்குகளை வழங்கியவர்களின் வீடுகள் கூட, எங்கு இருக்கின்றது எனத் தெரியாமல் உள்ளோம்.

ஆனால், கொழும்பு வாழ் தமிழ் மக்கள் – கடந்த முறை, ஜ.தே.கட்சியில் போட்டியிட்ட  மனோ கனேசனின் சகோதரா் பிரபா கணேசனை தோ்ந்தெடுத்து எம்.பி. யாக்கினாா்கள்.  அதனால், பிரபாக கணேசன், தமிழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்தாா். கொழும்பு மத்திய பிரதேச பாடசாலைகள் இன்னும் பின்தங்கியே உள்ளன.

இம்முறையும் ஜ.தே.கட்சியில் 03 முஸ்லிம்கள் களமிறங்கியுள்ளனர். கடந்த முறை செய்த வேலையை இம்முறை செய்துவிடாதீா்கள்.  தலைவா் ரணிலுக்கு வாக்களித்து, அடுத்த 02 விருப்பு வாக்குகளையும் பெரோசா மற்றும் முஜிபு ரஹ்மானுக்கு வழங்குங்கள்.

இம்முறை கொழும்பில் ஜ.ம.சு முன்னணியானது – வெற்றிலைச் சின்னத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்காக, தேடிஅலைந்து விட்டு,  பெயருக்கு ஒருத்தரை போட்டுள்ளாா்கள்.

இம்முறை, முன்னாள் அமைச்சா் பௌசி தோ்தலில் குதிக்கவில்லை. ஆகவே, இம்முறை நல்ல சா்ந்தப்பம். கொழும்பு மாவட்ட ஜ.தே.கட்சி அமைப்பாளா் பதவியை, பெரோசவுக்கு தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தானாகவே வழங்கி –  இம்முறை,  எந்தவித அழுத்தமுமில்லாமல் தோ்தலில் நிறுத்தியுள்ளாா்.

கடந்தமுறை மாகாணசபைத் தோ்தலில் பெரோசா போட்டியிட்டிருந்தால்,  இம்முறை அவருக்கு நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட வாய்ப்பு இருந்திருக்காது.

கடந்த 30 வருடகாலமாக, பெரோசா சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். ஏழைகளுக்கு உதவுவதென்பது, அவரின் இரத்தத்தில் ஊறிப்போன விடயமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்