ஹிருணிகாவுக்கு ஆண் குழந்தை; நேற்று பெற்றெடுத்தார்

🕔 August 4, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நேற்று வியாழக்கிழமை ஆண் குழந்தையொன்றினைப் பிரசவித்துள்ளார்.

பிரபல ஆடை அலங்கார கலைஞரான ஹிரோன் யட்டோவிட்ட என்பவரை 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஹிருணிகா திருமணம் செய்தார்.

ஹிருணிகா 1987 ஆம் ஆண்டு பிறந்தவர். அந்த வகையில், தனது முதல் குழந்தையினை 30 ஆவது வயதில் அவர் பெற்றெடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா, தனக்கு குழந்தை கிடைத்தமையினை, தனது முகநூல் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

குழந்தை கிடைத்தமை தொடர்பில், பேஸ்புக் பக்கத்தில் ஹிருணிகா குறிப்பிடுகையில்; நேற்றைய தினம், ஓர் அழகான ஆண் குழந்தைக்கு நாங்கள் பெற்றோர்களாகி இருக்கின்றோம். உங்கள் ஆசிகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். இப்போது, வாழ்க்கை இன்னும் அழகாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்