மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல்

🕔 June 21, 2017

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், தேர்தலை பிற்போடுவதாயின், அது தொடர்பில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இந்த வருடம், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், அவற்றுக்கான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பதவிக் காலம் நிறைவடையவுள்ள கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களை டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தயாராக உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments