அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம்

🕔 November 17, 2016

flood-add-009ட்டாளைச்சேனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று புதன்கிழமையும், இன்றும் பெய்து வரும் தொடர் மழையினால், அப்பிரதேசத்தின் தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இப் பிரதேசத்தில் முழுமையாக வடிகான்கள் நிர்மாணிக்கபடாமையும், சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வடிகான்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையுமே, இந்த நிலை ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இப் பிரதேசத்தின் சில வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினை அவதானிக்க முடிகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் வடிகான்களை முறையாகவும், தொடர்ச்சியாகவும் பராமரிக்காமையினாலேயே இந் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு அலட்சியமாகவிருக்கும் பிரதேச சபையினர், மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்ட பின்னர் வீதிகளையும், ஏனைய இடங்களையும் வெள்ள நீரை அகற்றும் பொருட்டு, தோண்டுவது – ஒவ்வொரு வருடமும் வாடிக்கையான செயற்பாடாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இனிவரும் காலங்களிலாவது இப்பிரதேசத்தில் வடிகான்களை முழுமையாக நிர்மாணிப்பதோடு, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வடிகான்களை முறையாகவும், தொடர்ச்சியாகவும் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.flood-add-008

Comments

புதிது பேஸ்புக் பக்கம்