நான்கு கட்சிகளுக்கு, தலா இரண்டு தரப்புக்கள் உரிமை கோருவதாக தெரிவிப்பு

🕔 September 20, 2016

election-commision-011– றிசாத் ஏ காதர் –

லங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 63 அரசியல் கட்சிகளில் நான்கு கட்சிகளை, தலா இவ்விரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முயல் சின்னத்தைக் கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் கட்சியை இரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளன.

அதேபோன்று கோப்பை சின்னத்தையுடைய எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய கட்சினையும் இரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜாதிக சங்வர்தன பெரமுன (தேங்காய் சின்னம்) மற்றும் ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி (பூச்சாடி) ஆகிய கட்சிகளையும் தலா இரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments