இளைஞரைக் கடத்திய விவகாரம்: ஹிருணிகாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை

🕔 September 21, 2016

hirunika - 01ளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு,  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியது.

ஆயினும், வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது.

இந்த வழக்குடன் தொடர்புபட்ட மேலும் எட்டுப்பேர் இன்றைய தினம் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த வழக்குகின்  சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, பிணை காலத்தில் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் பிணை ரத்துச் செய்யப்படும் என்றும், சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவர் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேற்படி கடத்தல் சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற சீ.சீ.ரி.வி. பதிவுகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதனையடுத்து, சந்தேக நபர்களுக்கு எதிராக 29 குற்றச்சாட்டுக்களின் கீழ், சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்