எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி

🕔 May 9, 2016

Hasan Ali - 097ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டு­களைப்  பேச்­சு­வார்த்­தைகளின் ஊடாகத் தீர்ப்­ப­தற்கு முன்னதாக, கட்­சி­யி­லி­ருந்து இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள்  இரு­வ­ரையும் மீண்டும் கட்சியின் அர­சியல் உயர்பீடத்துக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் பிறகு, தனது பிரச்­சினை தொடர்­பாக பேச்­சு­வார்த்­தையில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்­சியின் உள்­ளக முரண்­பா­டு­களை பேச்­சு­வார்த்தை மூலம் தீர்ப்­ப­தற்கு குழு நியமிக்கப்­பட்­டுள்­ளமை  குறித்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஹசனலி மேலும் கூறுகையில்;

“கட்­சியின் அர­சியல் உயர்­பீட உறுப்­பினர் பத­வி­யிலிருந்து, சதி செய்­த­தாக குற்றம் சுமத்தி இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள மௌல­விகள் ஏ.எல்.எம். கலீல், எச்.எம்.எம். இல்யாஸ் ஆகிய இரு­வரும் சதி எத­னையும் செய்­ய­வில்லை. அவர்கள் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளமை தவ­றாகும்.

கட்­சிக்குள் உள்­ளக முரண்­பா­டு­களை பேச்­சு­வார்த்­தைகள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியுமென ஏற்­க­னவே நான் கூறி­யி­ருக்­கிறேன் என்­றாலும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்தப்­ப­ட­வில்லை. இப்­போது பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­கென ஒரு குழு நியமிக்கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். இக் குழு­விடம் உண்மை நிலையினை விளக்கக் கூடி­ய­தாக இருக்கும்” என்றார்.

கட்­சியின் அர­சியல் உயர்­பீட உறுப்­பினர் பத­வி­யிலி ருந்தும் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள மௌல­விகள் ஏ.எல்.எம். கலீல், எச்.எம்.எம். இல்யாஸ் மற்றும் கட்­சியின் பொதுச் செய­லாளர் எம்.ரி. ஹசன் அலி மற்றும் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் ஆகியோரின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­கா­கவே மூவரடங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இக்­கு­ழுவில் கட்­சியின் அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளான யூ.எல்.எம்.என். முபீன், கே.எம்.ஏ. ஜவாட், சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கிணங்கள பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்