தலைப்புச் செய்திகள்

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேரத்திலும், காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதல்: மூவர் பலி

கோப்புப் படம்

இஸ்ரேலிய மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்குச்சாவடிகளுக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில், ஓராண்டு கால ‘போர் நிறுத்தம்’ நடைமுறையில் இருந்தபோதிலும், இஸ்ரேலிய ராணுவம் காஸா பகுதியில் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், முன்னதாக நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 2025-ல் ‘போர் நிறுத்தம்’ அறிவிக்கப்பட்டதிலிருந்து, இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 1,568 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 5,649 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 845 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும், அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காஸா சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, காஸாவில் இனப்படுகொலை போர் தொடங்கியதிலிருந்து இதுவரை மொத்தம் 74,564 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 175,770 பேர் காயமடைந்துள்ளனர்.