
பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஹோமாகம பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை, மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வு அதிகாரிகள், இன்று (28) மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 32 வயதுடைய இவர், ஹொரணை – பெல்லாபிட்டியவைச் சேர்ந்தவராவார். இவர் நாளை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளை – மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழந்தமையை அடுத்து, ஏற்கனவே மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் தடுப்பு/சோதனைப் பிரிவு பொறுப்பதிகாரி ஆகிய பொறுப்புகளில் இருந்த இரண்டு உதவி பரிசோதகர்களும், சம்பவத்தின் போது பணியில் இருந்த ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள்-உம் அடங்குவர்.



