
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரும் மனுவில் 50 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று (26) மிஹிந்தலை புனித வளாகத்தில் ஆரம்பமானது.
மிஹிந்தலை – ரஜமஹா விகாரையின் தலைமை விகாராதிபதி கலாநிதி வலவஹெங்குனவெவெ தம்மரதன தேரர், மகா சங்கத்தினர் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட ஏனையோருடன் இணைந்து இந்த மனுவில் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மிஹிந்தலை தலைமை விகாராதிபதி; ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் விசேட கோரிக்கை விடுத்தார்.
ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்புக்காக 06 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட அந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு – சட்டப்படி செல்லுபடியாகாது என்று செப்டம்பர் 10 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



