தலைப்புச் செய்திகள்

டான் பிரியசாத்தினுடைய சகோதரரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

ட்டு (08) துப்பாக்கிகள், வெடிமருந்துப் பொருட்கள் மற்றும் ஹெரோயினுடன் கடவத்தை – வபட பகுதியில் கைது செய்யப்பட்ட நபர், டான் பிரியசாத்-இன் சகோதரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டான் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும், தற்புர்த கைது செய்யப்பட்ட நபரின் தந்தையே முக்கிய சந்தேகநபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வபடவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, 0​​2 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின், பல்வேறு வகையான 534 தோட்டாக்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எட்டு துப்பாக்கிகள் மற்றும் இரண்டு ஜோடி கைவிலங்குகள் (handcuffs) ஆகியவற்றை அவரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றினர்.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒரு குற்றவாளியின் அறிவுறுத்தலின் பேரில், ஆயுதங்களையும் போதைப்பொருட்களையும் சேமித்து வைத்திருந்ததாகவும், அவரது உத்தரவின்படி அவற்றை பல்வேறு நபர்களுக்கு விநியோகித்து வந்ததாகவும் அந்த சந்தேகநபர் கூறியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் அந்தக் குற்றவாளிக்காக, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்வதில் இந்த சந்தேகநபர் முக்கிய பங்காற்றியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.