தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கு: நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது

ஸ்டர் தின தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிரான வழக்குத் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய ட்ரயல் அட்-பார் அமர்வு இன்று (22) வழங்கவுள்ளது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தின தாக்குதல்களுக்கு ஈஸ்டர் தின தாக்குதல்களை நடத்த சதி செய்தமை, தாக்குதல்களுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கியமை, தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு ஆதரவளித்தமை உள்ளிட்ட 23,270 குற்றசாட்டுகள் இவர்களுக்கு எதிராக சுமததப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதும், சந்தேக நபர்களில் ஒருவர் – சிறைக் காவலில் மரணமடைந்தார். இதனையடுத்து, 24 பேருக்கு எதிராக இந்த வழக்கு நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் நௌபர் மௌலவி என்பவர் பிரதான சந்தேக நபர்களில் ஒருவராவார்.

இன்றைய தீர்ப்பை நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் வழங்கவுள்ளனர்.

ஈஸ்டர் தின தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேட்பட்டோர் காயமடைந்தனர். அந்தத் தாக்குதலால் – பலர் நிரந்தரமாக அங்கவீனமடைந்துள்ளனர்.