
வீதி விபத்தில் காயமடைந்த இருவரின் பயணப் பைகளில் இருந்து 350 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை கொத்ததெனியாவ பொலிஸார் கண்டெடுத்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை தொரொவ பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பஸ் மற்றம் மோட்டார் பைக் ஆகியவை மோதியதில், மோட்டார் பைக் ஓட்டிவரும் பின்னால் அமர்ந்திருந்தவரும் படுகாயமடைந்தனர்.
அவர்கள் முதலில் தம்பதெனியா வைத்தியசாலைஅனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்து குறித்த விசாரணையின் போது, கொத்ததெனியாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் பயணப் பைகளைச் சோதனையிட்டதில் போதைப்பொருளைக் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர்களான 21 மற்றும் 25 வயதுடையவர்கள், கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.



