
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை, நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்தில், அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக – தேரர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக, தேரரை இன்று மட்டக்களப்பு பொலிஸார் இன்று கைது செய்து, மட்டக்களப்’பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.



