தலைப்புச் செய்திகள்

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது

ட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி – அம்பிட்டிய சுமனரத்தன தேரரை, மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பிலுள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்தில் கடமையிலிருந்த அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேரர் கைதாகியுள்ளார்.

இதனையடுத்து அவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளர்.