தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 24 பிரதிவாதிகள் எழுத்து மூல சமர்ப்பிப்புகளை முன்வைத்தனர்; 22ஆம் திகதி தீர்ப்பு

ஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான 23,270 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 24 பிரதிவாதிகள், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட அமர்வு (Trial-at-Bar) முன்னிலையில், தங்கள் எழுத்துமூல சமர்ப்பிப்புகளை இன்று (08) தாக்கல் செய்தனர்.

எழுத்துமூல சமர்ப்பிப்புகள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 அன்று வழங்கப்படும் என்று – கொழும்பு மேல் நீதிமன்ற விசேட அமர்வு அறிவித்தது.

நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணை நடவடிக்கைகளின் போது, ​​பிரதிவாதிகள் தங்கள் எழுத்துமூல சமர்ப்பிப்புகளை முன்வைத்தனர்.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக, சட்டமா அதிபர் இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தார்.