தலைப்புச் செய்திகள்

நாலரைக் கோடி ரூபாயை எரிபொருளுக்காக இரண்டு வருடங்களில் பயன்படுத்திய சபாநாயகர்: கணக்காய்வில் அம்பலம்

பாநாயகருக்காக ஒருக்கப்பட்ட எரிபொளை விடவும் மிக அதிகமான எரிபொருளை 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் சபாநாயகராகப் பதவி வகித்த மஹிந்த யாப்பா அபேவர்தன பயன்படுத்தியுள்ளமை விசேட கணக்காய்வு அறிக்கையொன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதன்படி 2023-இல் மாதத்திற்குச் சராசரியாக 3,994 லீட்டரும், 2024-இல் மாதத்திற்கு 6,122 லிட்டரும் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கணக்கின்படி 2023இல் 66% அதிகமாகவும், 2024இல் 155% அதிமாகவும் எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமையை 2023-இல் 19.37 மில்லியன் ரூபாயும், 2024-ல் 26.05 மில்லியன் ரூபாயும் எரிபொருளுக்காக செலவிடப்பட்டுள்ளது.

மொத்தமாக இரண்டு வருடங்களிலும் 45.42 மில்லியன் ரூபாய் (நாலரைக் கோடி ரூபாய்க்கும் அதிக தொகை) செலவிடப்பட்டுள்ளது.

2023–2024-ல் மூன்று உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மேலதிகமாக – ஒரு தனிப்பட்ட வாகனத்திற்காக ரூ. 8.55 மில்லியன் மதிப்புள்ள 21,299 லிட்டர் எரிபொருளைப் பிரதி சபாநாயகர் பெற்றுள்ளார். இந்த வாகனங்கள் 2023-ல் 6,980 லீட்டரும், 2024-ல் 1,515 லிட்டரும் ஒதுக்கீட்டை விட அதிகமாகப் பயன்படுத்தின.

451 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக 2016-2024-க்கு இடைப்பட்ட காலத்தில், ரூ. 208.9 மில்லியன் செலவிடப்பட்டது.

115 பணியாளர்களின் 83 வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 56.9 மில்லியன் நிதியளிக்கப்பட்டது.

இந்தப் பயணங்களின் முடிவுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பணியாளர்களோ அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.

காலாவதியான சட்டங்களை நாடாளுமன்றம் நம்பியிருப்பதே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் எனத் பிரதம கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.