
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது, அவர் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக, உதயநிதி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து உதயநிதி வீட்டுக்கு இன்று (04) காலை சென்ற பொலிஸார், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அப்போது ஊடகவியலாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி இது என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம் என்றும் கூறினார்.
நடிகை திரிஷா வை விஜய்யுடன் தொடர்புபடுத்தி – உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோக்கள் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது.


