தலைப்புச் செய்திகள்

தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான்: 37 வருட நினைவு தினம்

ணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான், தமிழ் ஆயுத இயக்கத்தவர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு, இன்றுடன் 37 வருடங்களாகின்றன

01.08.1989ஆம் ஆண்டு அக்கரைப்பற்றில் அவரின் வீட்டின் முன்னால், அலி உதுமான் சுட்டுக் கெல்லப்பட்டார்.

ENDLF இயக்கத்துடன் இணைந்து செயல்பட்ட – அக்கரைப்பற்றைச் சேர்ந்த நபர் ஒருவரை, 01.08.1989ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தவர்கள் சுட்டுக் கொன்றனர்.

இதனையடுத்து ENDLF அக்கரைப்பற்றுக்குள் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில், அப்போதைய இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அலி உதுமான் காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த சம்பவத்தின் போது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நயீம் எனும் மாணவரும் – துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

அட்டாளைச்சேனையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு டியூஷன் வகுப்புக்குச் சென்று திரும்பிய போது, நயீம் மீது ENDLF இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் நயீம் உயிரிழந்தார்.