
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கான செலவு 37.5 பில்லியன் டொலர்கள் என, அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பெறுமதியில் இந்தத் தொகை, 12 லட்சய்து 61 ஆரத்து 962 கோடி (1261962) ரூபாயாகும்.
செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவின் முன்பாக நேற்று நடந்த விசாரணையின் போது, ஹெக்ஸெத் இந்தத் தொகையை உறுதிப்படுத்தினார்.

அந்த விசாரணையில், ஈரானுடனான போருக்காக கிட்டத்தட்ட 70 பில்லியன் டொலர் உட்பட, 1.5 டிரில்லியன் டொலர் அமெரிக்க பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு கோரியது குறித்து அவரிடமும், கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் டான் கெய்னிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.
ஜனநாயகக் கட்சி செனட்டர் டிக் டர்பினின் கேள்விக்கு பதிலளித்த ஹெக்ஸெத், “இன்றைய நிலவரப்படி எங்களிடம் உள்ள மதிப்பீடு 37.5 பில்லியன் டொலர்கள்” என்று கூறினார்.
செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும் சில செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புச் செலவுகளும் இந்த தொகையில் அடங்கும் என்று ஹெக்ஸெத் மேலும் கூறினார்.
ஆனால் அது குறித்த குறிப்பிட்ட விவரங்களை அவர் வழங்கவில்லை.
சமீபத்திய மதிப்பீடானது, டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் மே மாதம் வெளியிடப்பட்ட 29 பில்லியன் டொலர் என்ற முந்தைய புள்ளிவிவரத்தை விட, சுமார் 8 பில்லியன் டாலர் அதிகமாகும்.
ஜூன் 17 முதல் தாக்குதல்களை நிறுத்தியிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), கடந்த வாரம் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான சண்டை தொடர்ந்து தீவிரமாக நடந்து வந்த நிலையில், குழுவின் முன் ஹெக்ஸெத்ஆஜரானார்.


