தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை நீடிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியானையை மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசநாயக்க இன்று (21) நீடித்தார்.

நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக இரண்டாவது முறையாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமையினை அடுத்து இந்த பிடியாணை நீடிக்கப்பட்டது.

இந்த வழக்கு, மாத்தறை – எலியகந்த வீதி, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள ரூ. 60 மில்லியன் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பு ஒன்றைக் கையகப்படுத்தியமை தொடர்பானது.

பசில் ராஜபக்ச மீண்டும் மீண்டும் ஆஜராகாததால், அவரைக் கைது செய்வதற்கான பிடியானையை நீதவான் நீடித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சரின் நான்கு பிணைதாரர்களுக்கும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதை உறுதி செய்யுமாறு பிரதான நீதவான் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

அவ்வாறு செய்யத் தவறினால், பிணைத் தொகையை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூறுமாறும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.