
ஜே.வி.பி-இன் (JVP) மறைந்த ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்திற்காக, அவரது மறைவுக்குப் பின்னர் 26 மில்லியன் ரூபாய் பொது நிதி செலவிடப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு அரசாங்கம் அளித்த பதிலில், இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசு தொடக்கத்தில் சித்ரங்கனி விஜேவீர மற்றும் அவரின் 06 பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கவே குறிப்பிட்ட தொகையைச் செலவிட்டது என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், அரசாங்கம் தற்போது ரோஹன விஜேவீர மற்றும் அவருடைய சிறப்புத் தேவைகள் கொண்ட மூத்த மகளுக்கு ஆதரவளித்து வருகிறது.


