தலைப்புச் செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 02 கை துப்பாக்கிகள் முகத்துவாரம் பகுதியில் மீட்பு

தெமட்டகொட பகுதியில் சமீபத்தில் மீட்கப்பட்ட 18 ஆயுதங்களைப் போன்ற, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்களை, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளா கொழும்பு முகத்துவாரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ‘மோதறை நிபுணா’ என்பவரின் சகோதரரான ‘மோதறை சதுர” என அறியப்படும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

அந்த சந்தேக நபர் – சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

விசாரணைகள் தொடரும் நிலையில், அவர் தற்போது 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முகத்துவாரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘டி-கட்டாஸ்’ ரகத்தைச் சேர்ந்த இரண்டு துப்பாக்கிகளை புலனாய்வாளர்கள் மீட்டனர்.

தெமட்டகொடவில் முன்னர் மீட்கப்பட்ட 18 ஆயுதங்களுடன் சேர்த்து, இந்தத் துப்பாக்கிகளும் ஒரே நபராலேயே தயாரிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸ் சந்தேகிக்கிறது.

எனவே, துப்பாக்கி தயாரித்த வரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக ஒரு விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் அறிவுறுத்தல்களின் பேரில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த விசாரணையை நடத்தி வருகிறது.

தொடர்ச்சியான பொலிஸ் நடவடிக்கைகளாலும், சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படுவதாலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களிடையே ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த உளவுத் தகவல்களின்படி, இந்தப் பற்றாக்குறை சில குற்றவாளிகளை உள்நாட்டில் துப்பாக்கிகளைத் தயாரிக்கத் வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது.