
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவை, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினர் இன்று (17) கைது செய்துள்ளனர்.
ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையில் அவரது ஆட்சேர்ப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ரோயல் கடற்படை கல்லூரியில் அவர் பெற்ற பயிற்சி தொடர்பான தொடர் விசாரணைக்காக யோசித ராஜபக்ஷ ஆணைக்குழுவிற்கு சமூகமளித்திருந்தார்.

விசாரணை அதிகாரிகளின் விசாரணையைத் தொடர்ந்து, அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
முதலில் அவர் நேற்று ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார், ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணை காரணமாக தன்னால் கலந்துகொள்ள இயலாது என்று – அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.


