தலைப்புச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்: தெஹ்ரான் உள்ளிட்ட இடங்களில் பாரிய வெடிப்புச் சத்தங்கள்

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் நேற்றிரவு (07) இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியமைக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.

ஈரானின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ இலக்குகளைத் தாங்கள் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்பஹானில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெஹ்ரானில் குறைந்தது இரண்டு சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்களும், இஸ்பஹான் நகரில் குறைந்தது மூன்று வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக IRNA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

”எங்கள் மண்ணிலுள்ள இலக்குகளை – வான்வழி பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்கியுள்ளது” ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி ராணுவம் தெரிவித்துள்ளது.