தலைப்புச் செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேல் மீது நேற்றிரவு (07) ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலைத் தாக்குவோம் என, ஈரான் எச்சரித்து வந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லெபனான் மீது நேற்று இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியமைக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈரானின் ஏவுகணைகளை தடுத்து அழித்து விட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளபோதும், இஸ்ரேலின் பல இடங்களில் ஈரானின் ஏவுகணைகள் வெடித்துள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.

ஈரான் இவ்வாறு தாக்குதலை நடத்திய பின்னர், ”நீங்கள் ஏவுகணைகளை ஏவி விட்டீர்கள், பேச்சுவார்த்தைக்குத் திரும்புங்கள்” என, ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி வழங்க வேண்டாம் என்று – இஸ்ரேலை, ட்ரம்ப் கேட்டுக் கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.