தலைப்புச் செய்திகள்

சுரேஷ் சாலே வைத்தியசாலையில் அனுமதி

ரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதத் தடை சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுரேஷ் சாலே உண்ணாவிரதம் இருந்து வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தனக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் முறையற்ற நடத்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (06) இரவு தொடக்கம் – அவர் சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பித்த நிலையிலேயே, இன்று அவர் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் சாலே உணவு, நீர் மற்றும் மருந்துகளை உட்கொள்ள மறுத்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்றிருந்த சுரேஷ் சாலேயின் மனைவி, ஊடகங்களைச் சந்தித்து பேசியிருந்தார்.

தொடர்பான செய்தி: சாகும் வரை உண்ணாவிரதமிருக்கும் தனது கணவரை, வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுரேஷ்சாலேயின் மனைவி கோரிக்கை