தலைப்புச் செய்திகள்

எரிபொருள்களின் விலைகள் தாறுமாறாக அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் அதிகளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் புதிய விலைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

லங்கா சுப்பர் டீசல் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 478 ரூபாயாக விற்பனையாகிறது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக விற்பனையாகிறது.

மண்ணெண்ணெய் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.