தலைப்புச் செய்திகள்

இந்திய புவியியலாளர் கொகெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கினார்

கொக்கைன் போதைப்பொருளை கடத்திக் கொண்டு வந்த இந்தியர் ஒருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சுமார் ரூ. 108 மில்லியன் மதிப்புள்ள மேற்படி போதைப்பொருளை கடத்த முயன்றபோது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர், தொழில் ரீதியாக புவியியலாளரான (geologist) 60 வயது இந்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை 10:40 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்பு, உகண்டா தலைநகர் கம்பாலாவிலிருந்து கட்டாருக்கு போதைப்பொருளைக் கொண்டு வந்துள்ளார்.

02 கிலோகிராம் மற்றும் 150 கிராம் கொக்கைன் அடங்கிய அந்த போதைப்பொருள், அவரது பயணப் பையில் இருந்த சான்றிதழ்களை வைத்திருந்த இரண்டு கோப்பு உறைகளுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர் – கைப்பற்றப்பட்ட கொக்கைனுடன் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.