தலைப்புச் செய்திகள்

நீர் கட்டணம் உயர்த்தப்படுமா: அமைச்சர் பதில்

நீர் கட்டணங்கள் இந்த ஆண்டு உயர்த்தப்படுமா என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என, நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சுசில் ரணசிங்க; நீர் கட்டணங்கள் ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி 30 மற்றும் ஜூன் 30 ஆகிய திகதிகளில் பரிசீலனை செய்யப்படுவதாகக் கூறினார்.

மேலும், எந்தவொரு கட்டணத் திருத்தமும் ஜூன் மாத பரிசீலனையின் போது மட்டுமே முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

“இப்போதைக்கு எங்களால் எதுவும் கூற முடியாது. அக்காலச் சூழலைப் பொறுத்தே எங்களால் தீர்மானிக்க செய்ய முடியும்” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.