தலைப்புச் செய்திகள்

19 உயிர்களை, ஏப்ரல் மாதத்தில் காப்பாற்றிய கடலோர காவல் படையினர்

நாடு முழுவதும் கடலில் மூழ்கிய 19 பேரை – கடந்த ஏப்ரல் மாதம், இலங்கை கடலோரக் காவல்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 14 பேர் வெளிநாட்டினர் மற்றும் 5 பேர் இலங்கையர்களாவர்.

நீச்சல் மற்றும் கடல் நிலவரங்களை ‘உயிர்காப்பாளர் நிலையங்கள்’ தீவிரமாகக் கண்காணித்து வந்த வெவ்வேறு கடலோரப் பகுதிகளில் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

காப்பாற்றப்பட்டவர்ளின் வயது 5 முதல் 62 வரையானோர் இருந்தனர். பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.

முக்கிய சுற்றுலா கடற்கரைகளில் அமைக்கப்பட்ட 16 ‘உயிர்காப்பாளர் நிலையங்கள்’ மூல,ம் இந்த மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கடந்த மாதத்தில் அவசரநிலைமைகளக்கு பணியாளர்கள் பதிலளித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2010-ல் நிறுவப்பட்டதிலிருந்து, நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருந்து மொத்தம் 2,629 பேரை மீட்டுள்ளதாக, இலங்கை கடலோரக் காவல்படை மேலும் குறிப்பிட்டது. அவர்களில் 1,221 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவர்.