தலைப்புச் செய்திகள்

163,197 பேர் 06 மாதத்தில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது

‘முழு நாடுமே ஒன்றாக’ – தேசிய நடவடிக்கையின் கீழ் கடந்த 06 மாதங்களாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது – கைது செய்யப்பட்ட 289 நபர்கள் மீது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 163,197 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2,719 சந்தேக நபர்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஒக்டோபர் 2025 மற்றும் ஏப்ரல் 2026 க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, ​​பின்வரும் அளவிலான போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றினர்.

  • ஹெரோயின்: 1,932 கிலோ
  • ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்): 1,985 கிலோ
  • கொக்கைன்: 271 கிலோ

மேலதிகமாக, சோதனைகளின் போது, கணிசமான அளவிலான கஞ்சா, கஞ்சா செடிகள், குஷ், ஹஷிஷ், போதை மாத்திரைகள், மதன மோதகம் மற்றும் மாவா ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.