
சுமார் 302 கிலோ போதைப்பொருட்கள், புத்தளம் – வண்ணாத்திவில்லுவிலுள்ள லக்டோவத்த எரிவாயு உலையில் அழிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் இன்று (27) நீதித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அழிக்கப்பட்டன.
தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்தமையை அடுத்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் இவ்வாறு அழிக்கப்பட்டன.
குறித்த வழக்குகள் – அந்தந்த நீதிமன்றங்களில் முழுமையாகத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், பலப்பிட்டிய நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன மற்றும் ஹலவத்த நீதவான் ஹர்ஷ டி. சில்வா ஆகியோர் முன்னிலையில் இவை அழிக்கப்பட்டன.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சோதனைகளில் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.


