தலைப்புச் செய்திகள்

இஸ்ரேல் ஏஜென்டுக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

இஸ்ரேல் ஏஜென்டாக வேலை செய்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஈரானில் இன்று (25) நபரொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இர்பான் கயானி எனும் நபரொருவரே – அந்த வகையில் இன்று தூக்கிலிடப்பட்டார்.

ஈரானில் – அந்த நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக, ஜனவரி மாதம் நாடு தழுவிய போராட்டங்கள் நடந்தன. அதன்போது, நாசவேலைகளில் ஈடுபட்டார் என, இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், இஸ்ரேலுக்காக இவர் ஏஜென்ட் ஆகப் பணியாற்றினார் எனவும் ஈரான் தெரிவிக்கிறது.

‘பயங்கரவாதத்தை உருவாக்கினார்’ என்கிற குற்றச்சாட்டும் இவருக்கு எதிராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரின் மரண தண்டனை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, இன்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.