
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட பட்டமையினை அடுத்து, அவரை கொழும்பு குற்றப்பிரிவு கைது செய்ததாக பொலிஸ் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் தேடுதல் ஆணை பெற்று, பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மம்பேயிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இன்று காலை (16) சோதனை நடத்தினர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனையின் போது – ஒரு கையெறி குண்டு, இரண்டு T-56 ரக ரவைக்கூடுகள், T-56 ரக தோட்டாக்கள்221, 0.22 ரக தோட்டாக்கள் 103, 84S ரக தோட்டாக்கள் 31 கைப்பற்றப்பட்டன.
மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்காக வழங்கப்பட்ட 12-போர் ரக (bore firearm) துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலை மீட்டெடுத்தனர் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.


