தலைப்புச் செய்திகள்

பிரதேச சபை வருமான வரி பரிசோதகர் கைது

ருமான வரி பரிசோதகர் ஒருவரை 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்தது.

மேற்படி சந்தேக நபர் மொனராகல பிரதேச சபையில் கடமையாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ காரியமொன்றை எளிதாக்குவதற்கு ஈடாக அந்த நபர் பணம் கோரியதாக வந்த முறைப்பாட்டையடுத்து – நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், நேற்று இவரைக் கைது செய்தனர்.