
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் 29 ஆயிரம் ரூபாய் குறைவடைந்துள்ளது.
வியாழன் (19), வெள்ளி மற்றும் இன்று சனிக்கிழமை (21) ஆகிய நாட்களில் தங்கத்தின் விலை இவ்வாறு சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
வியாழனன்று தங்கத்தின் விலை ரூ. 13,000 சரிந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 6,000-ரூபாயும், இன்று மேலும்10,000 ரூபாயும் குறைந்துள்ளது.
உலகளாவிய தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர் என்ற குறியீட்டிற்குக் கீழே சரிந்ததே – இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மத்திய கிழக்கு மோதலின் உலகப் பொருளாதாரத் தாக்கம், குறைந்த முதலீட்டு நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் ஆகியவற்றால் அமெரிக்க டொலர் வலுப்பெற்றதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், இந்த நிலைமை தற்காலிகமானது என்றும், எண்ணெய் விலைகள் நிலைபெற்றவுடன் தங்கத்தின் விலை – மீண்டும் உயர சந்தர்ப்பம் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


