504 இடங்களில் 1039 தாக்குதல்கள்: ஈரானின் கள நிலைவரம்
🕔
அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் காரணமாக ஈரான் முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று, செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
ஈரானில் இதுவரை மொத்தம் 504 இடங்கள் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஐ எட்டியுள்ளது.
”நாங்கள் முன்னர் தெரிவித்தபடி, இதுவரை தாக்குதல்களில் குறைந்தது 787 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், இடிபாடுகளை அகற்றி வருகின்றனர், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்” செம்பிறைச் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.