
ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் போரில் தனது நட்பு நாடுகள் ஆதரவைக் கோரினால் அவர்களைப் பாதுகாக்க பிரான்ஸ் தயாராக உள்ளது என்றும், தலையிடும் உரிமையை அது கொண்டுள்ளது என்றும் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய பேட்டியில்; “சண்டை பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளை மோதலுக்கு இழுத்துச் செல்கிறது. அதனுடன் எங்களுக்கு உறவுகள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நலன்கள் உள்ளன, அவற்றில் ராணுவ தளங்களும் அடங்கும்” என்று அவர் கூறினார்.
பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளில் சுமார் 400,000 பிரெஞ்சு நாட்டினர் இருப்பதாகவும், வணிக மற்றும் ராணுவ விமானங்கள் மூலம் மிகவும் ஆபத்தில் உள்ளவர்களை திருப்பி அனுப்ப பிரான்ஸ் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்த விளக்கத்தைப் பெற்ற பிறகு, ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையின் நோக்கத்தை ஜனாதிபதி டிரம்ப் விளக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


