
உரிய அனுமதிமதிப் பத்திரமின்றி அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமின்றி 413 லீட்டர் டீசல் வைத்திருந்ததாகக் கூறப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூகொட பகுதியிலுள்ள விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை நேற்று (02) கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை மாலை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவிலுள்ள புத்பிட்டிய பகுதிக்கு அதிரடிப்படையினர் சென்ற போது, 50 வயதுடைய மேற்படி நபர் டீசலுடன் கைது செய்யப்பட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


