தலைப்புச் செய்திகள்

ஹோமியோபதி வைத்தியம் எனும் பெயரில் செக்ஸ் நிலையம்; மணித்தியாலத்துக்கு 07 ஆயிரம் ரூபாய்: அகப்பட்டது இடம்

ஹோமியோபதி சிகிச்சை மையம் என்ற போர்வையில் – முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பத்தலே பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை மேல் மாகாண (தெற்கு) குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

இந்த நடவடிக்கையின் போது மூன்று நபர்களும், அதன் உரிமையாளர் என்று நம்பப்படும் ஒரு ஹோமியோபதி மருத்துவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, வைத்தியசாலையாகக் காட்டிக் கொண்டு, பாலியல் சேவைகளை வழங்க இந்த வளாகம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 7,000 வசூலிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.