
தவறான செய்திகளை தொடர்ந்தும் ஒளிபரப்பியமைக்காக, ஹிரு ஊடக வலையமைப்பிற்கு எதிராக – தேவையான நடவடிக்களை எடுக்குமாறு கோரி, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு (TRC) கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக, பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள் குறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் – ஊடகமொன்றுக்குத் கூறியுள்ளார்.
ஒளிபரப்பு உரிமங்களை வழங்குவதற்கான அதிகாரமுள்ள நிறுவனம் எனும் வகையில், தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு – பொருத்தமான எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதத்தின் மூலம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கும் ஹிரு ஊடக வலையமைப்பிற்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.


