
தெற்கு ஆழ்கடலில் நேற்று கடற்படையினர் கைப்ப்றிய படகில், ரூ.2 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள, சுமார்160 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.
மேற்படி படகு நேற்று டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய பிரதியமைச்சர்; மேலதிகமாக, 21 கிலோகிராம் ஹெராயினும் படகில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.
இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடி படகு, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக ஐந்து சந்தேக நபர்களுடன் டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

முதற்கட்ட விசாரணைகளில், இந்த கப்பல் முதலில் கந்தர பகுதியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களுடன் சேர்ந்து படகில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருட்கள், மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


