தலைப்புச் செய்திகள்

அனர்த்தத்துக்கு மத்தியிலும் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்

நாட்டில் மோசமான வானிலை நிலவிய போதிலும், இந்த டிசம்பர் மாதத்தின் 21 நாட்களில் 154,609 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் படி, இந்த ஆண்டின் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை இதுவரை 22 லட்சத்து 58,202 ஐ எட்டியுள்ளது.

இந்தியா, ஜெர்மனி, ரஷ்யா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டில் 510,133 சுற்றுலாப் பயணிகள் – இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.